மாவட்ட நீதிமன்றங்களில் கூட இனி வக்கீல்கள் வீடியோ கால் வசதி மூலமாக ஆஜராகலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாவட்ட நீதித்துறையில் ஹைபிரிட் வீடியோ கான்பரன்சிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இனிமேல், மாவட்ட நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அதை நடைமுறையில் செய்யலாம்.
ஹைப்ரிட் வி.சி (வீடியோ கால்) முறையில் வழக்குகளை விசாரிக்கும் வசதி திங்கள்கிழமை (பிப்.5,2024) முதல் மாவட்ட நீதித்துறைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “அனைத்து அதிகார வரம்புகளிலும் உள்ள வசதியைப் பயன்படுத்துமாறு பார் உறுப்பினர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது சம்பந்தமாக மேற்கண்ட ஏற்பாட்டை திறம்பட செயல்படுத்த சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“