சென்னை அடையாறு ஆற்றை மீட்டெடுத்து, ஆற்றங்கரை பகுதிகளைப் புனரமைக்க ரூ 1500 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று (பிப்.19) சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்தவகையில் தமிழ்நாட்டின் முக்கிய நதிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடையார் ஆற்றங்கரையில் புதிதாக 4 பூங்காக்கள், 16 கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் தயாரிக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“