தேச தூரோக வழக்கில் கைதான வைகோவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
வைகோ எழுதிய குற்றம் சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழா 2009ம் ஆண்டு, சென்னை ராணி சீதை ஹாலில் நடந்தது.
புத்தக வெளியீட்டுவிழாவில் வைகோ பேசியது, தேச தூரோகம் என்று அப்போதைய திமுக அரசு வழக்குப் பதிவு செய்தது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்படாமல் எழும்பூர் நீதி மன்றத்திலேயே இருந்தது.
இந்த வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 3ம் தேதி வைகோ நீதிமன்றத்தில் தானாக சரண் அடைந்தார். இதையடுத்து வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 52 நாட்கள் சிறையில் இருந்த வைகோவுக்கு இன்று சென்சன்சு கோர்ட் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து அவர் நாளை காலை சிறையில் இருந்து விடுதலையாகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.