Janardhan Koushik
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள், உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘If someone had warned us…’: After heavy rain, villages in TN’s Thoothukudi struggle without food, water and power
“திங்கட்கிழமை மழை குறைந்தது, செவ்வாய்கிழமை பெரிதாக மழை பெய்யவில்லை. ஆனால், இன்னும் தூத்துக்குடி நகரில் உள்ள அனைத்து தெருக்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பி அன்ட் டி காலனி, முத்தமிழ் நகர் போன்ற பகுதிகளில் இன்றும் பல தெருக்களில் கழுத்தளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது,” என்று மழை பெய்யத் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்காக தூத்துக்குடி வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த ராகுல் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ராகுல் தற்போது அப்பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
"பல தெருக்கள் குறுகலாக இருப்பதால் பெரிய படகுகள் உள்ளே வருவது கடினம் மற்றும் சிறிய ரப்பர் படகுகள் பாயும் நீரின் சக்தியை தாங்காது. ஏதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குடியிருப்பாளர்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். சென்னையைப் போல் இங்கு தண்ணீர் தேங்காமல் தொடர்ந்து ஓடுகிறது. எனவே மீட்பு நடவடிக்கைகள் கடினமாகி வருகின்றன,” என்று ராகுல் indianexpress.com இடம் கூறினார்.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி போன்ற பகுதிகளில் சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. “செவ்வாய்க்கிழமை காலை முதல் முகாம்களுக்கு உணவு விநியோகம் சரியாக கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக உணவு கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்,” என்று ராகுல் கூறினார்.
/indian-express-tamil/media/post_attachments/2b9165b0-f3a.jpg)
மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் அவசர உதவி எண்ணை அழைத்தது குறித்து ராகுல் பேசினார். "திங்கட்கிழமை மாலை முதல் அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இரண்டு ஆம்புலன்ஸ்கள் அவளது பகுதிக்கு சென்றிருந்தன, ஆனால் நீர் மட்டம் காரணமாக மேற்கொண்டு செல்ல முடியாது என்று கூறி திரும்பி விட்டன. மீட்பு படகு கூட அவரது இடத்தை அடைய முடியவில்லை. செவ்வாய்கிழமை சில தொழிலாளர்களால் அவர் மீட்கப்பட்டார், அந்த கர்ப்பிணி பெண் நன்றாக இருக்கிறார்,” என்று ராகுல் கூறினார்.
கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள முறப்பநாடு, ஆழ்வார்கர்குளம், அகரம், வல்லநாடு, நாணல்காடு உள்ளிட்ட பல கிராமங்கள், மூன்று நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன.
வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளதாக, விவசாயத்தில் செழித்து வரும் உட்பகுதி கிராமமான ஆழ்வார்கர்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் (27) தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் 12-15 அடி உயரம் வரை நீரில் மூழ்கியுள்ளன என்று முத்துக்குமார் கூறினார். “பயிர்கள் மற்றும் வாய்க்கால் கடுமையாக சேதமடைந்துள்ளன. விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை நஷ்டம் ஏற்படும் என்பதால், இது விவசாயிகளுக்கு ஒரு பெரிய அடியாகும்” என்று முத்துக்குமார் கூறினார்.
“கொங்கராயக்குறிச்சியிலும் இதே நிலைதான். வீடு முழுவதும் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டின் மேல் தளத்தில் தங்கியுள்ளனர். தொலைபேசி இணைப்பு இல்லாததாலும், போக்குவரத்து வசதியில்லாததாலும் என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்று கூறிய முத்துக்குமார், எந்த அதிகாரியும் அவர்களைச் சந்திக்கவில்லை அல்லது எந்த உதவியும் செய்யவில்லை, என்றும் கூறினார்.
/indian-express-tamil/media/post_attachments/319ec181-f0b.jpg)
வி.எம் சத்திரம் மேம்பாட்டு அறக்கட்டளையின் ஒரு பகுதியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் உதவிப் பேராசிரியர் சுரேஷ் கூறுகையில், நாணல்காடு, அகரம் பகுதி முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது என்று கூறினார். தூத்துக்குடி நெடுஞ்சாலையில் இருளில் நின்ற சுரேஷ், அப்பகுதி முழுவதும் மின்சாரம் இல்லை என்று கூறினார்.
”வல்லநாடு முதல் அகரம் வரை, மின் கம்பங்கள் சேதமடைந்து, சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. நெடுஞ்சாலையோரம் தேவைப்படும் அனைவருக்கும் நாங்கள் உதவி செய்து வருகிறோம். உணவு, குடிநீருக்காக மக்கள் சிரமப்படுகின்றனர்... மருத்துவ முகாம்கள் எதுவும் முறையாக அமைக்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்,” என்று சுரேஷ் கூறினார்.
மற்றொரு அகரம் குடியிருப்பாளர் தனது குடும்ப உறுப்பினர்கள் மூவருடன் பைக்கில் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார், செவ்வாயன்று தான் தங்களுக்கு சில உதவி கிடைத்ததாகக் கூறினார். “எனது வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. மிக்சி, கிரைண்டர் போன்ற அனைத்து விலையுயர்ந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன. குடிநீரும் இல்லை. யாரும் எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை. கனமழை பெய்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. யாராவது எங்களை எச்சரித்திருந்தால்... நாங்கள் தயாராக இருந்திருப்போம்,” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“