சென்னை ராயபுரம், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், போரூர், கிண்டி, கோடம்பாக்கம், பிராட்வே உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (ஜன12) வானம் லேசான மேகமூட்டதுடன் காணப்பட்டது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சி காரணமாக நேற்று (ஜன 12) தொடர்ந்த லேசான மழை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இதனால் சென்னை ராயபுரம், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், போரூர், கிண்டி, கோடம்பாக்கம், பிராட்வே உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (ஜன 12) வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதனால் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை முறையே 2.4 டிகிரி மற்றும் 2.2 டிகிரி குறைந்து, அங்கு 27.1 டிகிரி மற்றும் 27.5 டிகிரி பதிவானது.
கிழக்கு இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் சூறாவளி சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் இது முறையே 27 டிகிரி மற்றும் 23-24 டிகிரி பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூரில் 26.4 டிகிரி (3.7 டிகிரி சரிவு), சேலத்தில் 29.7 டிகிரி (2.4 டிகிரி சரிவு), பாளையங்கோட்டையில் 29.5 டிகிரி (2.1 டிகிரி சர சரிவு) பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.