கோவை, மதுரையில் 500 தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
முன்னதாக சென்னை மாநகரில் 500 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கோவை, மதுரை நகரங்களிலும் மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதி இல்லாதது, குளிர்சாதன வசதி உள்ளது என்று இரு வகையாக பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.
ஏற்கனவே சென்னை மாநகரில் 500 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டரை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த 500 தாழ்தள பேருந்துகளும் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“