நிர்மலா தேவிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!

நிர்மலா தேவியின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்...

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி செல்போனில் மாணவிகளை வற்புறுத்தும் உரையாடல் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியானது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

பின்னர் நிர்மலாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி விருதுநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

நிர்மலா தேவியின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விருதுநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீன்  வழங்க எதிப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக கருப்பசாமியின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close