வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.கடலோர பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலுக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வந்தடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து தமிழகத்தை நோக்கி 2 நாட்களில் நகரும் எனவும் கூறியுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“