தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையத்தை மூடக் கோரி கல்லூரி மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துகுடியின், சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை, தாமிர உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்த தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் நச்சு வாயுவால் தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்படுவதாக அங்குள்ள கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை கூடுதலாக 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்திக்காக ஆலையை விரிவாக்க முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், மாணவர்கள், மாணவிகள் ஆகியோர் கடந்த 52 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக திரண்டு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லூரி மாணவிகளும் வகுப்புகளை புறகணித்து விட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தூத்துக்குடி அருகே உள்ள பிஷப் கால்டுவெல் கல்லூரி மாணவர்கள் நேற்று காலையில் கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று காலை தொடர்ந்து போராட்டம் நடைப்பெற்றது. இதனைத்தொடர்ந்து, தற்போது அங்குய் இயங்கும் பெண்கள் கல்லூரி மாணவர்களும்வெயில் என்று கூட பாராமல் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்க்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு வகுப்புகளை புறக்கணித்து அவர்கள் நடத்தும் போராட்டம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.