கத்தரி வெயில் ஆரம்பம்: தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்?

கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. ஆனாலும், மழை காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் வெயில் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. ஆனாலும், மழை காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் வெயில் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
sasasa

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. பொதுவாக, கோடையில் வெயில் சற்று அதிகமாக இருக்கும் அதேபோலதான் இந்த ஆண்டும் புவி வெப்பமயமாதலுக்கு பிறகு கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது.

Advertisment

இருப்பினும், வளிமண்டல் சுழற்சி காரணமாக கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  

வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்தார். பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலம் என்பது 24 நாட்கள் ஆகும். அதுவும் 3 பகுதியாக பிரிக்கப்பட்டு வெப்பத்தின் தாக்கம் அளவிடப்படுகிறது. முதல் பகுதியில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.

அந்த வகையில், இம்மாதம் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும்.  மையப் பகுதியில் வெயில் உச்சத்தை அடையும். இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் உச்சி வெயிலில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கடல் காற்று குறைந்து அனல் காற்று வீசும் என்றார். 

Advertisment
Advertisements

தற்போது வரை தமிழகத்தில் வெயிலின் அளவு 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. அக்னி நட்சத்திரத்தில் 42, 43 டிகிரி செல்சியசாக வெயிலின் அளவு உயரக் கூடும். இம்மாதம் 28 ஆம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. அதற்கு பிறகு. வெயிலின் அளவு படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Agni Nakshatram summer

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: