Agni Natchathiram Chennai weather today : எப்போதுமே கோடை காலத்தில் சென்னையின் வெப்பநிலை உச்சத்தில் இருக்கும். அக்னி நட்சத்திரம் நாளை தான் துவங்கிறது. இருப்பினும் சென்னையின் பல்வேறு இடங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியசை தொட்டுவிட்டது. கோடையில் வரும் மேங்கோ ஷவர் மழையும் பொய்த்துவிட்டது.
ஃபனி புயலினால் மழை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபனி ஒடிசாவில் இன்று கரையைக் கடக்கிறது. மேலும் புயல் சென்னைக்கு வெகு அருகில் வந்து திசை மாறியதால் இந்த பிராந்தியத்தில் இருக்கும் காற்றின் ஈரப்பதம் அனைத்தையும் வாரிச் சென்றுவிட்டது என்பதால் வறண்ட வானிலையே காணப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் குடி தண்ணீருக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
அதிராமபட்டினம் – 35.7 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் 28.5 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை
சென்னை நுங்கம்பாக்கம் – 41.4 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் 30.2 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை
கோவை – 35.4 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை. 23.4 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை
குன்னூரில் அதிகபட்சமாக 25.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 16.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
கடலூரில் 40.2 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலையும், 28.0 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையும் பதிவாகும்.
கன்னியாகுமரி 33.2 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் 27.4 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை
காரைக்கால் – 36.6 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் 29.2 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை
கொடைக்கானல் – 23.2 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பமும், 15.3 டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலையும் நிலவும்
மதுரையில் 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகபட்சமாகவும் குறைந்தபட்ச வெப்பம் 28.1 டிகிரி செல்சியஸ் எனவும் வானிலை தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை (04/05/2019) துவங்கி 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் நீடிக்கும். 29ம் தேதி அக்னி நட்சத்திரம் நிறைவடைந்து பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறையத் துவங்கும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Agni natchathiram chennai weather today temperature hits 40 degree celsius in many places
அரசியலை விட்டு விலகுகிறேன், தொண்டர்களுக்கு நன்றி! – சசிகலா அறிவிப்பு
எம்ஜிஆர் குரல்… எம்ஜிஆர் வேடம்… நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ
ஜேஇஇ மெயின்: மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
நீச்சல் குளம்… கலர்ஃபுல் பிகினி… காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ
அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!
பாஜகவுக்கு வீழ்ச்சி… ஆம் ஆத்மிக்கு எழுச்சி! டெல்லி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?