தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைக்கிறது. வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 100,110 என்ற அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். பகல் நேரங்களில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக ஈரோட்டில் நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவாக 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனக் கூறப்படும் கத்தரி வெயில் நாளை (மே 4)தொடங்குகிறது. தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசுவதால் வெயில் சுட்டெரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“