கோயம்புத்தூரில் வேளாண் கண்காட்சி: இதன் சிறப்பு என்ன?

கோயம்புத்தூரில் வேளாண் கண்காட்சி ஜூலை 14ஆம் தேதி நடக்கிறது.

கோயம்புத்தூரில் வேளாண் கண்காட்சி ஜூலை 14ஆம் தேதி நடக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Agricultural fair in Coimbatore will be held on 14th July

கோயம்புத்தூரில் வேளாண்மை கண்காட்சி நடத்துவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு

கோவையில் 21ஆவது பதிப்பாக நடைபெறும் வேளாண் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடு நவீன தொழில் நுட்பங்கள் காட்சிபடுத்த இருப்பதாக வேளாண் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பை, தலைவர் தினேஷ் குமார்,கொடிசியா தலைவர் திருஞானம்,மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் நடத்தினர்.

Advertisment

அப்போது, “21ஆவது பதிப்பாக நடைபெறும் விவசாய கண்காட்சி ஜூலை 14ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

இந்தக் கண்காட்சியில், துல்லிய வேளாண்மை மற்றும் நுண் நீர் பாசனம் மூலம் இந்திய வேளாண்மையில் மாற்றங்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

இதில், கொரியா, இஸ்ரேல், ஜப்பான்,ஸ்வீடன் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஆந்திரம்,சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

Advertisment
Advertisements

மேலும்,வேளாண் இயந்திரங்கள் , உபகரணங்கள், பாசனக் கருவிகள், கால்நடைப் பராமரிப்பு,வேலிகள்,எடைக் கருவிகள், பம்புகள் , உரம் , விதை உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் சார்ந்த பொருட்கள் இடம்பெற உள்ளன.

செய்தியாயர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: