Advertisment

ஆயிரம் ரூபாய்க்கு கைநீட்டி மூன்று வருடம் சிறைக்குச் சென்ற வேளாண் அதிகாரிகள்

திருச்சி வேளாண் அலுவலர்கள் கடந்த 2007- ல் லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக 2023-ல் சிறைக்குச் சென்றது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
Arrest

ஆயிரம் ரூபாய்க்கு கைநீட்டி மூன்று வருடம் சிறைக்குச் சென்ற வேளாண் அதிகாரிகள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் குணலை பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் தனது சித்தப்பா பெயரில் வாங்கிய டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த சான்றிதழ் வேண்டி கடந்த 08.08.2007 அன்று மண்ணச்சநல்லூர் வேளாண்மை வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வேளாண்மை அலுவலர் நாகராஜன் என்பவரை சந்தித்து மனு செய்தார்.

Advertisment

இதுகுறித்து ஆய்வு செய்த வேளாண் அலுவலர் நாகராஜன், சான்றிதழ் வழங்க ரூ.1000/- லஞ்சமாக கேட்டிருக்கிறார்.

இது தொடர்பாக, கடந்த (09.08.2007) அன்று அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் வேளாண்மை அலுவலர்,  நாகராஜன் என்பவர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.13/2007-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அன்றைய தினமே லஞ்ச ஒழிப்புத்துறையினர் மறைந்து இருந்து மண்ணச்சநல்லூர் வேளாண்மை வளர்ச்சி அலுவலகத்தில் அசோக்குமாரிடம், நாகராஜன் லஞ்சமாக பணம் ரூ.1000/-தை உதவி வேளாண்மை அலுவலர் சின்னதுரை, என்பவர் மூலம் பெற்றது தொடர்பாக மேற்படி எதிரிகள் 2 பேரும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணை முடிவுற்று இன்று 29-ஆம் தேதி திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், மேற்படி மண்ணச்சநல்லூர் வேளாண்மை அலுவலர், நாகராஜன், என்பவருக்கு லஞ்ச பணம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக தலா ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் மற்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் மற்றும் மண்ணச்சநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர், சின்னதுரை  என்பவருக்கு அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

திருச்சி வேளாண் அலுவலர்கள் கடந்த 2007- ல் லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக 2023-ல் சிறைக்குச் சென்றது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchi District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment