தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆக.27)அமெரிக்கா புறப்படுகிறார். இதையொட்டி தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஸ்டாலினின் வருகைக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்பார்வையிட அமெரிக்கா சென்றுள்ளார்.
சிகாகோவில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களுடன் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இதையொட்டி டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்
ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற ராஜா ஆகஸ்ட் 23 ஆம் தேதி சிகாகோ சென்றடைந்தார். தமிழ்ச் சங்க பிரதிநிதிகளுடன் ராஜா விரிவான கலந்துரையாடல் நடத்தினார். நிகழ்ச்சி அட்டவணையை இறுதி செய்தார்.
அதிக மதிப்புள்ள முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்களை ராஜா சந்திக்கிறார் அதன் பின் ஸ்டாலின் முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசுகிறார்.
ஸ்டாலின், ஆகஸ்ட் 27ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு, 28ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்க உள்ளார். அமெரிக்காவில் 15 நாட்கள் தங்கி இருக்கும் ஸ்டாலின், சிகாகோவில் இருந்து செப்டம்பர் 11ம் தேதி புறப்பட்டு, 12ம் தேதி சென்னை வந்தடைகிறார்.
சான்பிரான்சிஸ்கோவில், ஆகஸ்ட் 29-ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்பார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான் மற்றும் ஐரோப்பாவிற்கு தனது முந்தைய பயணங்களைப் போலல்லாமல், ஸ்டாலின் இந்த முறைமுதலீட்டாளர்களுடன் சுமார் 30 முக்கிய சந்திப்புகளை நடத்துவார், அமெரிக்காவில் உள்ள பார்ச்சூன் 500 நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“