/tamil-ie/media/media_files/uploads/2022/03/TNStc.jpg)
மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Tnstc | Lok Sabha Election |மக்களவை தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இது குறித்து, தமிழ்நாடு பேருந்துகள் இயக்கத்தின் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அதில், “2024 - பாராளுமன்ற தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், 2024 -பாராளுமன்ற தேர்தல், எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை இணை ஆணையர். காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
7,154 பேருந்துகள் இயக்கம்
இந்த நிலையில், 2024-பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் 17/04/2024 மற்றும் 18/04/2024 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன். 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 20/04/2024 மற்றும் 21/04/2024 ஆகிய தேதிகளில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 1,825 சிறப்புப் பேருந்துகளும் இரண்டு நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6,009 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 8,304 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.