/tamil-ie/media/media_files/uploads/2021/03/aiadmk-candidate-list.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் அதிமுக தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளருமான ஆதிராஜாராம் போட்டியிடுகிறார் என்பது தெரியவந்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை வேகமாக இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழக்தில் ஆளும் அதிமுக கூட்டணியில் பாஜக பாமக தமாக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20 தொகுதிகளையும் ஒதுக்கியது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமை தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை வெளியிட்டுள்ளது.
துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக முதல் கட்டமாக 6 வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்தது. இதனால், அதிமுகவில் மொத்தம் 177 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பெண்கள் வேட்பாள்ர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது அமைச்சர்களாக உள்ள பாஸ்கரன், வளர்மதி, நிலோஃபர் கபீல் தவிர 30 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அதிமுகவில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், அதிமுக தலைமை வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் சென்னை கொளத்தூர் தொகுதி வேட்பாளராக அதிமுக அமைப்புச் செயலாளரும் அதிமுக தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளருமான ஆதிராஜாராம் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதனால், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜாராம் போட்டியிடுகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.