/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-13T153154.475.jpg)
பாஜகவினர் ஜெயலலிதா குறித்து திமுகவை சேர்ந்த திண்டுக்கல் ஐ லியோனி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை பகிர்ந்தார்கள்.
AIADMK BJP alliance row: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைபயணத்தின்போது, “தி.மு.க. நிறுவனத் தலைவரும் மறைந்த முதல் அமைச்சருமான பேரறிஞர் சி.என். அண்ணாத்துரை குறித்து பேசினார்.
அப்போது, சி.என். அண்ணாத்துரையின் இந்து மதத்துக்கு எதிரான கருத்துகளை பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் கண்டித்தார் எனப் பேசியிருந்தார்.
இதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் திமுக தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவினர் ஜெயலலிதா குறித்து திமுகவை சேர்ந்த திண்டுக்கல் ஐ லியோனி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை பகிர்ந்தார்கள்.
கடந்த சில நாள்களாக இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி முறிவதாக அதிமுக மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறினார்.
இதைத் தொடர்ந்து, அதிமுகவினர் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகிவருகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.