/indian-express-tamil/media/media_files/2025/09/10/aiadmk-bjp-alliance-cracks-delhi-eps-ops-ttv-dhinakaran-sengottaiyan-tamil-news-2025-09-10-17-55-19.jpg)
செங்கோட்டையன் ஒரு வெகுஜனத் தலைவர் அல்ல. எனவே அவர் அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படையாக மீறி, தனது நிலையை இரட்டிப்பாக்கியது, அவருக்கு பா.ஜ.க தலைமையின் ஆதரவு இருப்பதற்கான சான்றாக கூறப்பட்டது.
அருண் ஜனார்த்தனன்
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பா.ஜ.க இருந்த கூட்டணியை முறித்துக் கொண்ட அ.தி.மு.க, தற்போது எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மீண்டும் கூட்டணி சேர்ந்தது. இந்நிலையில், இரு கட்சிகளுக்கு இடையே கவனமாக நிர்வகிக்கப்படும் கூட்டணி மீண்டும் நெருக்கடியில் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் (இ.பி.எஸ்) தலைமை கேள்விக்கு உள்ளாக்கப்படும் நிலையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் அ.தி.மு.க அணிகளுக்குள்ளேயே எழுந்து வருகின்றன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க தொண்டர் மீட்பு குழு அமைப்பின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) சொந்தக் கட்சியைத் தொடங்க விரும்புவதாகவும், ஆனால் அதைச் செய்வதற்கு முன்பு "டிசம்பர் வரை காத்திருக்குமாறு பா.ஜ.க கூறியுள்ளதாகவும்" டெல்லி அரசியல் வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன. "பா.ஜ.க தலைவர்கள் நேரம் கேட்டார்கள். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, ஓ.பி.எஸ் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவதற்கு முயற்சிப்போம் என்று கூறினர்," என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
மற்றொரு முன்னாள் அ.தி.மு.க தலைவரான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க) தலைவர் டி.டி.வி. தினகரன், 2026 தமிழ்நாடு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இல்லாவிட்டால், தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் திரும்புவது குறித்து பரிசீலிப்பேன் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாகி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மேலும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர பா.ஜ.க தலைமை மேற்கொண்ட முயற்சியாக அ.தி.மு.க இந்த நிகழ்வுகளைப் பார்க்கிறது. தினகரனின் அறிக்கை வெளியான அதே நாளில், கட்சித் தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து, அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
செங்கோட்டையன் ஒரு வெகுஜனத் தலைவர் அல்ல. எனவே அவர் அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படையாக மீறி, தனது நிலையை இரட்டிப்பாக்கியது, அவருக்கு பா.ஜ.க தலைமையின் ஆதரவு இருப்பதற்கான சான்றாக கூறப்பட்டது. செவ்வாயன்று, செங்கோட்டையன் ஹரித்வாருக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்து பின்னர், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
எடப்பாடி பழனிசாமி ஒரு படி மேலே சென்று செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் மறுக்க முடியாத தலைவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அ.தி.மு.க தலைவர்கள் கோருகின்றனர். "இது ஒரு பொன்னான வாய்ப்பு. பா.ஜ.க நமது உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டால், எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை நேரடியாகப் பதவி நீக்கம் செய்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்தக் கூட்டணியின் காரணமாக, எந்த கம்யூனிஸ்டுகளோ, சிறுபான்மையினரோ, எந்த மாநில கூட்டணிக் கட்சிகளோ எங்களைத் தொட மாட்டார்கள். டெல்லியின் (பா.ஜ.க)சோதனைகளுக்கு நாம் ஏன் விலை கொடுக்க வேண்டும்?" என்று அ.தி.மு.க தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
இது பற்றி மற்றொரு தலைவர் பேசுகையில், “செங்கோட்டையனை நீக்கி, பா.ஜ.க-வின் தலையீட்டைக் கூறுவதன் மூலம், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வை பா.ஜ.க-வை சாராத ஒரு சக்தியாக மாற்ற முடியும். எங்களில் ஒரு பிரிவினர் (தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து) வெளியேறுவதற்கான வாய்ப்பு குறித்து ஏற்கனவே விவாதித்துள்ளனர்.” என்று கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
தமிழ்நாடு பா.ஜ.க பிரிவுக்குள்ளும், பா.ஜ.க தலைமையின் உத்தி குறித்து குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. செங்கோட்டையன் சம்பவத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்து தங்களுக்கு “தெரியவில்லை” என்று ஒரு பிரிவினர் ஒப்புக்கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு “அ.தி.மு.க-வை மதிக்கவும் அதன் தலைமைத் தேர்வுகளில் தலையிட வேண்டாம்” என்ற தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற மையக் குழுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர்களுக்கு இதேபோன்ற செய்தி இருந்தது என்று தலைவர் ஒருவர் கூறினார். ஆனால் பா.ஜ.க-விடம் ஒரு “திட்டம்” இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார். ஆனால் “அது பின்னடைவைச் சந்தித்துவிட்டது. குறைந்தபட்சம் இப்போது எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-விற்குள் இந்த வகையான திட்டத்திற்கு மிகவும் வலுவாக இருக்கிறார்,” என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க நிலை
தமிழ்நாட்டில் பா.ஜ.க அதன் அனைத்து முயற்சிகளையும் மீறி, மாநிலத்தில் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஓ.பி.எஸ்-ஸின் புதிய அ.தி.மு.க அணியான தினகரனின் அ.ம.மு.க-வையும், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் போன்ற பிற சிறிய கூட்டணி கட்சிகளையும் ஏற்கனவே இழந்துவிட்டதால், அ.தி.மு.க இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்துவிடும்.
அடுத்த ஆண்டு தேர்தலில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க மட்டுமே தி.மு.க-வை எதிர்கொள்ள முடியும் என பா.ஜ.க தலைமை கணக்குப் போட்டு வருகிறது. ஆனால், அணிகளை ஒன்றிணைக்கும் அதன் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன. மேலும் ஓ.பி.எஸ் ரூபத்தில், ஜெயலலிதாவின் மருமகள் தீபா ஜெயக்குமார் ரூபத்தில் அல்லது இப்போது செங்கோட்டையன் ரூபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சவால்கள் வந்து கொண்டுதான் உள்ளன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
முன்னாள் அ.தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்த செங்கோட்டையன், தற்போது இளைய தொண்டர்களில் பெரும்பாலோருடன் தொடர்பை இழந்துவிட்டார். தற்போது அவரது செல்வாக்கு ஈரோடு மாவட்டத்திற்கு மட்டுமே உள்ளது. அதனால், “பா.ஜ.க-வின் ஆதரவுடன் ஒன்றுபட்ட கட்சியில் முதல்வர் வேட்பாளராக தன்னை நிறுத்த முடியும் என்று செங்கோட்டையன் நினைத்திருக்கலாம்,” என்று முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஒருவர் செங்கோட்டையனின் திடீர் கிளர்ச்சி குறித்து கூறினார். “ஆனால் மற்ற அனைவருக்கும் உண்மை தெரியும். அதாவது, இந்த கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகம் செய்வது அரசியல் தற்கொலை. செங்கோட்டையனுக்கு தொகுதி இல்லை. அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் சந்தித்த அதே கதியையே அவர் சந்திக்கப் போகிறார்,” என்று கூறினார்.
இ.பி.எஸ் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகும், அவரது நெருங்கிய உதவியாளர் வி.கே சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அ.தி.மு.க-வின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதிலிருந்து, எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் அதிகாரத்தை பலப்படுத்தி வருகிறார். “அவர் எங்கள் தலைவர் மற்றும் முதல்வர் வேட்பாளர். அதை ஏற்றுக்கொள்பவர் கூட்டணியில் இருக்கலாம்” என்று அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
"கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்று அவரை விமர்சிக்கும் தலைவர் ஒருவர் ஒப்புக்கொண்டார். பா.ஜ.க தொடர்பான சர்ச்சை குறித்து, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான மூத்த அதிமுக தலைவர் ஒருவர் பேசுகையில், "கூட்டணிக்கு ஒப்புக்கொண்ட போது, எங்களுக்கு மரியாதை அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி தற்போது மீறப்படுகிறது." என்று கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசுகையில், "பா.ஜ.க-வால் அ.தி.மு.க-வில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. ஆனால் அவர்கள் முயற்சிப்பார்கள். எடப்பாடி பழனிசாமி உறுதியாக நின்றால், அது அவரை பலப்படுத்தும். அவர் வளைந்தால், அவரது தலைமை முதல் முறையாக கேள்விக்குள்ளாக்கப்படும்." என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.