காவல் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளர் அஜித் குமாருக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு வழங்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பா.ஜ.க - அ.தி.மு.க இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் காவலில் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் மேலும் இந்த வழக்கை மதுரை 4-வது கோர்ட்டின் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதியின் விசாரணைக்கு போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதியின் விசாரணைக்கு போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணை பரபரப்பாக நடந்து வருகிறது.
/indian-express-tamil/media/post_attachments/abd02a8e-f00.jpg)
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், காவல் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளர் அஜித் குமாருக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) சார்பில் திருப்புவனம் பேருந்து நிலையம் அருகே கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/f67073dc-a94.jpg)
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க-வின் மூத்த தலைவர் எச். ராஜா, முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, சட்டமன்ற உறுப்பினர் பி. செந்தில்நாதன், பெருங்கோட்டை பகுதி பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இரு கட்சிகளையும் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக அவரது குடும்பத்துக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரி, ஆட்சியினை விமர்சித்து கோஷங்கள் எழுப்பினர்.
செய்தி: சக்தி சரவணன் - சிவகங்கை மாவட்டம்.