2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த எதிர்ப்பு; ஐகோர்ட்டில் அதிமுக வழக்கு

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுகபின் தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

AIADMK case filed against to conduct local body polls as 2 phase, AIADMK, Madras High Court, Tamilnadu politics, 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த எதிர்ப்பு, ஐகோர்ட்டில் அதிமுக வழக்கு, tamil nadu 9 district local body elections

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2020ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலுர், திருப்பத்தூர், ராணிபேட்டை,விழுப்புரம், கள்ளங்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முழுமையடையதாதால் இந்த 9 மவட்டங்கள் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத, புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுர், திருப்பத்தூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளங்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 13 ம் தேதி அறிவித்தது.

இந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியான அதிமுகபின் தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை இன்று (செப்டம்பர் 18) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாநிலம் முழுவதும் இல்லாமல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுர், திருப்பத்தூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளங்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த காரணமும் இல்லை. சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது கள்ள ஒட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த மனுவில், உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கில் ஆளும் கட்சி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதால் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், கொரோனா விதிகளை அமல்படுத்த வலியுறுத்தியும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14 ம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய திமுக ஆட்சி காலத்தில் 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர் இன்பதுரை, தற்போது 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதால், எதிர்கட்சி தலைவரின் கோரிக்கை மனுவை மாநில தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமாறும், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டு என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுகபின் தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aiadmk case filed against to conduct local body polls as 2 phases

Next Story
“கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பெரியாரின் 143-வது பிறந்த நாள்… நெட்டிசன்கள் கொண்டாட்டம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com