அடடே அரசியல்வாதி… பதவிக்கு கத்தி வந்ததும் பளீர்னு கட்சி தாவிய யூனியன் சேர்மன்!

அதிமுகவைச் சேர்ந்த, கெங்கவல்லி ஒன்றியக் குழு தலைவி பிரியா தனக்கு எதிராக, திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக பிரியா திமுகவுக்கு தாவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

AIADMK chairperson jumps to DMK before No confidence motion vote, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய சேர்மன், நம்பிக்கையில்லா தீர்மானம், ஆத்தூர் பஞ்சாயத்ஹ்டு யூனியன், கெங்கவல்லி பஞ்சாயத்து யூனியன், salem district, Gangavalli Union Panchayat chairman jumps to DMK from AIADMK, Atthur Union Panchayat, DMK, AIADMK, Local Body Elections

அதிமுகவைச் சேர்ந்த, கெங்கவல்லி ஒன்றியக் குழு தலைவி தனக்கு எதிராக, எதிர்க்கட்சியான திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு, முன்னதாக ஒன்றியக் குழு தலைவி பிரியா திமுகவுக்கு தாவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த, கெங்கவல்லி ஒன்றியக் குழு தலைவி பிரியா. அமுகவைச் சேர்ந்த இவர் மீது எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒரு நால் முன்னதாக பிரியா மற்றும் அதிமுக உறுப்பினர்கள் 5 பேர் டிசம்பர் 31ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்யுமாறு மனு அளித்தனர். மேலும், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மாலை, கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மன் பிரியாவும் மற்றொரு அதிமுக உறுப்பினர் கே.கீதாவும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து திமுகவில் இணைந்தனர். சேலத்தில் இதையடுத்து, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், கெங்கவல்லி ஒன்றியத்தின் 2 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்ததால் அந்த ஒன்றியத்தில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.

திமுக உறுப்பினர் ஆர்.கோமதி விரைவில் ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேலும் ஒரு கவுன்சிலர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறியதால், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவியை அதிமுகவிடம் இருந்து திமுக கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

சேலம் மாவட்டத்தில் 2019 டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களையும் கைப்பற்றியது. ஆனால், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தலைவர் பதவிகளை கைப்பற்ற அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை இழுக்க அக்கட்சி உறுப்பினர்களை முடுக்கிவிட்டது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மாலை, மற்றொரு அதிமுக உறுப்பினர் பி.ரவிச்சந்திரன் திமுகவில் இணைந்தார், இதனால் அவையில் திமுகவின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. பாமக மற்றும் தேமுதிகவுடன் 11 உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதால் இன்னும் 2 வாரங்களில் ஒன்றியக் குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

கெங்கவல்லி பஞ்சாயத்து யூனியன் சேர்மன் தனது பதவிக்கு கத்தி வந்ததும் அதிமுகவில் இருந்து பளீர்னு திமுகவுக்கு தாவியதை அடடே அரசியல்வாதி என்று பலரும் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aiadmk chairperson jumps to dmk before no confidence motion vote

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express