எடப்பாடிக்கு நெல்லை, குமரி மாவட்ட அதிமுக ஆதரவு: ஓயாத முதல்வர் வேட்பாளர் சர்ச்சை

துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் குறித்த சில கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதைத் தவிர்த்தார்.

By: Updated: August 14, 2020, 12:41:13 PM

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி கே பழனிசாமிக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் சுதா கே பரமசிவன் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள், வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவு தெரிவித்தனர்.

BSNL சுதந்திர தின ஆஃபர்: ஆயிரம் இருந்தாலும் வேறு யாருக்கும் இந்தச் சிந்தனை வருமா?

கட்சி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டம் எப்போதும் பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் என்றும், இபிஎஸ் மட்டுமே கட்சியையும், அது உருவாக்கிய அரசாங்கத்தையும் காப்பாற்ற முடியும் என்றும் பரமசிவன் கூறினார்.

“முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோருக்குப் பிறகு, பழனிசாமி தான் அதிமுக உறுப்பினர்களின் மனதில் பதிந்துள்ளார். அதிமுக மாவட்ட பிரிவு அவரை முதலமைச்சராக்குவதற்காக பணியாற்ற தயாராக உள்ளது. இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எதிர்வரும் தேர்தலில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் உட்பட தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும்” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், “ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபடுவதிலிருந்து பழனிசாமி காப்பாற்றியுள்ளார். தொற்றுநோயைக் கையாள்வதில் இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட முதலமைச்சர் என பழனிசாமி தன்னை நிரூபித்திருந்தார். கட்சியும் அரசாங்கமும் தனக்கு இரண்டு கண்கள் என்று ஜெயலலிதா கூறினார். பழனிசாமி அதைப் பின்பற்றுகிறார். கட்சியில் போட்டி இல்லை (முதலமைச்சர் வேட்பாளராக). இரட்டை இலைகள் சின்னத்தில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் தேர்தலில் வெற்றி பெறுவார்” என்றார்.

அதே நேரத்தில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் குறித்த சில கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதைத் தவிர்த்தார். ஆனால் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளரான வி.கே சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும், கட்சியை எதுவும் செய்ய முடியாது என்றார்.

என்.தளவாய் சுந்தரம் கருத்து

இதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு தேர்தலில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் போட்டியிடுவார் என தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, என்.தளவாய் சுந்தரம் தெரிவித்தார். இது குறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யாரென்று கேட்டால், தற்போது யார் முதல்வராக இருக்கிறாரோ அவர் தான். இதில் வேறு கேள்விக்கே இடமில்லை. கொரோனா விழிப்புணர்வு, ஆய்வுப் பணிகள் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் பாராட்டைப் பெற்றுள்ளார்” என்றார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு… அசோக் கெலாட் எதிர்கொள்ளும் சவால்கள்!

உரிய நேரத்தில் முடிவு – கே.பி.முனுசாமி

ஆனால், அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என அதிமுக.,வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “முதல்வர் வேட்பாளர் யார் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அ.தி.மு.க., நிர்வாகிகள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் தான் பா.ஜ., தொடர்கிறது. பார்லிமென்ட் தேர்தலை அ.தி.மு.க., தலைமையில் தான் சந்தித்தோம். அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம் என பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறியுள்ளார். ஆதாயத்திற்காக பா.ஜ.,விற்கு சென்ற துரைசாமி கருத்திற்கு பதில் சொல்ல முடியாது. சட்டசபை தேர்தலுக்கான பணிகளை ஏற்கனவே அ.தி.மு.க., துவங்கிவிட்டது” என்றார்.

கடந்த சில நாட்களாக அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சலசலப்பு எழுந்துள்ளது. இது குறித்து ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது கருத்தைத் தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Aiadmk cm candidate issue edappadi palaniswami o panneer selvam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X