CV Shanmugam | Dr Ramadoss: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றன. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சந்தித்து பேசினார். மக்களவை தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து வரும் சூழலில் இந்த திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தேர்தலை கூட்டணி அமைத்துதான் சந்திப்போம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி இருந்த நிலையில், கூட்டணி தொடர்பாக தற்போது வரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. எந்த அணியில் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என பா.ம.க. தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணியை ஒருங்கிணைக்க ஜி.கே.வாசன் பேசி வருவதாக கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 7 தொகுதிகளில் பா.ம.க. போட்டியிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“