Advertisment

"தேவர் தங்க கவசம்.. எனக்கே அதிகாரம்" : கோர்ட்டுக்கு சென்ற திண்டுக்கல் சீனிவாசன்

பசும்பொன் முத்துவராமலிங்க தேவரின் பிறந்த நாளை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

author-image
WebDesk
Oct 19, 2022 17:16 IST
"தேவர் தங்க கவசம்.. எனக்கே அதிகாரம்" : கோர்ட்டுக்கு சென்ற திண்டுக்கல் சீனிவாசன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச்செல்லும் அதிகாரம் அதிமுக பொருளாளராக எனக்கே அதிகாரம் உள்ளது என்று கூறி திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Advertisment

பசும்பொன் முத்துவராமலிங்க தேவரின் பிறந்த நாளை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய அதிமுக முதல்வர் ஜெயலலிதா தேவர் சிலைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை வழங்கினார். இந்த கவசம் மதுரை அண்ணா நகர் பகுதியில் ஒரு வங்கியில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ந் தேதி கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் வங்கியில் இருந்து எடுத்துச்சென்று விழா முடிந்ததும் அதனை பத்திரமாக மீண்டும் வங்கிக்கு கொண்டு செல்வார்.

ஆனால் தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்துவிட்ட நிலையில், ஒபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவரின் பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டதாகவும் இபிஎஸ் தரப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது தேவரின் தங்க கவசத்தை வாங்க இபிஎஸ் ஒபிஎஸ் தரப்பு போட்டி போட்டு வருகிறது.

இதனிடையே தேவரின் தங்க கவசத்தை பெறும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளது என்று உத்தரவிட கோரி திண்டுக்கல் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ஒபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது அதிமுகவில் பொருளாளராக இருக்கும் எனக்கே தேவரின் தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறும் அதிகாரம் உள்ளது.

ஆனால் வங்கி அதிகாரிகள் தன்னிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். வரும் 30-ந் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தங்க கவசத்தினை பத்திரமாக எடுத்துச்செல்ல இடைக்கால உத்தரவு வழங்கவும், அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில கட்சியின் வங்கி கணக்குகளை உபயோகப்படுத்தும் அதிகாரத்தையும் வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment