Advertisment

டிடிவி தினகரன் கட்சியுடன் கூட்டணியா? 22-ம் தேதி அதிமுக முக்கிய ஆலோசனை

டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக.வுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை பாஜக முன்மொழிவதாக பேச்சு இருக்கிறது.

author-image
WebDesk
New Update
News Highlights: சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க சதி; அதிமுக- அமமுக பரஸ்பர புகார்

AIADMK District Secretaries Meeting: ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisment

ஜனவரி 9-ம் தேதிதான் சென்னை வானகரம் வெங்கடேஸ்வரா மண்டபத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடியது. அதில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு ஒப்புதல், கூட்டணி பற்றி முடிவெடுக்க இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோருக்கு அதிகாரம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறுகிய இடைவெளியில் வருகிற 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூடி ஆலோசிக்க இருக்கிறார்கள். 22-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 நாள் டெல்லி பயணத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து திரும்புகிறார். சசிகலாவை அதிமுக.வில் இணைப்பது, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக-வுடன் அதிமுக- பாஜக கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல அம்சங்கள் ஆலோசிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சசிகலாவை அதிமுக.வில் இணைக்கும் வாய்ப்பு 100 சதவிகிதம் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எனினும் அரசியலில் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்கிற இலக்கணத்திற்கு ஏற்ப, அடுத்து என்ன நடக்கும்? என ஹேஸ்யங்கள் உலா வந்தபடியே இருக்கின்றன. அதிமுக கூட்டணியை வலுப்படுத்த டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக.வுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை பாஜக முன்மொழிவதாக பேச்சு இருக்கிறது. இது குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தவிர, புதுப்பிக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை வருகிற 27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார். இது தொடர்பான ஆலோசனைகளும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் திரளான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

அதே நாளில்தான் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார். அவரை வரவேற்க அமமுக ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிக்கான முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் அதே நாளில் ஜெ நினைவிடத்தை திறக்க அரசுத் தரப்பு ஏற்பாடு செய்வதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Aiadmk Edappadi K Palaniswami Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment