ஜூலை 11ஆம் தேதியன்று அதிமுகவின் பொதுக்குழு நடைபெற்றது. அதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த முடிவை எதிர்த்து ஓ.பன்னேர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தற்போதும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
இதை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கட்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓ.பி.எஸ்., அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil