நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக – திமுக கட்சிகள் இடையே மாறிமாறி விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது, நீட் தேர்வுக்குள் மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்கான விமர்சனங்களாக மாறியுள்ளது.
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஒப்புதல் அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 3-4 வாரங்கள் அவகாசம் தேவைப்படும் என்று தாமதப்படுத்திய நிலையில், அதையொட்டி கடந்த வாரம் அதிமுக – திமுக இடையே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மருத்துவப் படிப்பில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் இடங்களைப் போல, அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய இடம் கிடைக்கவில்லை என்பதால் கொண்டுவரப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செய்வதற்கான சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெற இயலவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆதாய அரசியல் செய்கிறார் என்று பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த மசோதாவுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வெள்ளிக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார். இந்த சட்டத்துக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று நான் நம்புகிறேன். அது ஏழை மாணவர்களுக்கு சம நீதியை உறுதி செய்யும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். இது குறித்து “நான் ஆளுநருக்கு எழுதிய கடிதம் எழுதியது அமைச்சர்களின் அறிக்கைகள் மக்களுக்கு நன்றாகவே தெரியும். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இது எல்லாமே அவரால்தான் நடந்தது என்ற ஒரு மாயையை உருவாக்க முயற்சிக்கிறார்” என்று முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
மேலும், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வை செயல்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் தான் நீட் தேர்வுக்கு முதலில் அனுமதி அளிக்கபட்டதாக அதிமுக குற்றம் சாட்டியது. திமுகவோ, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் பெறுவதில் தாமதமாவதைக் காட்டி அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 75.% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரில் புரோஹித்துக்கு கடிதம் எழுதினார். அதோடு, இந்த சட்டத்துக்கு ஆலுநரின் ஒப்புதலைப் பெற அதிமுக அரசுடன் இணைந்து போராடுவதற்கு தயார் என்று கூறினார். மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினார்.
மு.க.ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி கூறுகையில், “முதலில் நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தவர்கள் திமுகவும் காங்கிரசும்தான். ஆனால், தமிழகத்துக்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தது அதிமுக அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை. அதே நேரத்தில் கடந்த 9 ஆண்டுகளில் அதிமுக அரசு, மாநிலத்தில் 3,050 மருத்துவப் படிப்பு இடங்களை உருவாக்கியுள்ளது. என்று கூறினார்.
மேலும், முதல்வர் பழனிசாமி கூறுகையில், “அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான வாக்குறுதியின் மீது எனது புகர் அதிகரித்து வருவதால், அதை தாங்க முடியாமல் மு.க.ஸ்டாலின் அறிக்கை போர்களில் ஈடுபடுகிறார்.” என்று கூறினார். இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் “பழனிசாமி தன்னைப் பற்றி மிகவும் உயர்வாக நினைத்துக்கொண்டால், அவர் ஒரு நாளுக்குள் ஆளுநரின் ஒப்புதலைப் பெறட்டும்.” என்று கூறினார்.
அதிமுக, திமுக ஆகிய இரு தரப்பும் 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்துல் ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதில் ஒரே கருத்தில் இருந்தாலும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க தனக்குத் கால அவகாசம் தேவை என்பதை அமைச்சரவைக்குத் தெரிவித்தார். அதோடு, அதைப் பற்றி ஸ்டாலினுக்கும் தெரிவித்தார். இதனால், முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநரிடம்தான் உள்ளது எனபது அதிமுகவுக்கு சங்கடமானது.
அதிமுக, திமுக இருகட்சிகளும் இப்போது நீட் தேர்வுக்குள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடுக்காக போராடுகின்றன. அதே நேரத்தில், நீட் தேர்வை நீக்க வேண்டும் என்ற முந்தைய கோரிக்கை இப்போது பின்னால் சென்றுவிட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக – திமுக கட்சிகள் இடையே மாறிமாறி விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது, நீட் தேர்வுக்குள் மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்கான விவகாரமாக மாறியுள்ளது.