/indian-express-tamil/media/media_files/8prIu1HfaSnRsA9BJkn4.jpg)
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அ.தி.மு.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Aiadmk |Edappadi Palaniswami: நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அ.தி.மு.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் பிரசாரக் குழுவில், தம்பிதுரை எம்.பி., செங்கோட்டையன், என்.தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ, தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் விளம்பரக் குழுவில், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, பி.வேணுகோபால், வி.பி.பி. பரமசிவம், ஐ.எஸ்.இன்பதுரை, எஸ். அப்துல் ரஹீம், வி.வி.ஆர். ராஜ் சத்யன், வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுக்களுக்கு கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.