/tamil-ie/media/media_files/uploads/2021/01/cm-palaniswami-2.jpg)
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்படுவர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நீதிமன்ற உத்தரவுப்படி தான் சசிகலா, இளவரசி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன . இதில், அரசுக்கு எந்தவித சமந்தமும் இல்லை. தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுக்கும், இதற்கும் எந்த சமந்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.
கட்சியின் நிலைப்பாட்டை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டனர். செல்லும் இடமெல்லாம், கட்சிக்கு மக்கள் வெள்ளம் போல் அதரவு தெரிவித்து வருகின்றனர் .
அதிமுக வேறு, அமமுக வேறு. கட்சிக்குள் நுழைய அமமுக எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறது. அங்கிருந்து விலகி யாரேனும் அதிமுகவில் சேர விரும்பினால் கட்சி தலைமை முடிவு செய்யும்.
திமுக-வை தான் எங்களின் பிரதான எதிர்க்கட்சி. அதை எதிர்த்து தான், அண்ணா திமுக தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வருகிறது.
துரைமுருகன் அதிமுக கட்சியைப் பற்றை கவலைப்பட வேண்டாம். திமுக பற்றி கவலைப்படட்டும். அழகிரி பற்றி பேசட்டும். எங்கள் கட்சியில் ஒற்றுமை உள்ளது. ஒரு எள் முனையளவுகூட அதிமுகவில் பிரச்சனை இல்லை.
சசிகலா, தினகரன் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆட்சியைக் கலைக்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என்ற நோக்கில் தினகரன் அதிமுகவில் இருந்து 18 எம்எல்ஏ- க்களை பிரித்து சென்றார். அதன் காரணமாக தான், தற்போது தினகரனை பற்றியே பேசி வருகிறோம் என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us