அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும், வீட்டுக்கு ஒரு வாஷிங்மெஷின், குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அதிமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதிமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத்திற்கு ஒரு வாஷிங்மெஷின், குடும்பத்திற்கு ஆண்டு தோறும் 6 விலையில்லா கேஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளனர்.
அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
வீடுகளுக்கு வாஷிங்மெஷின் வழங்கப்படும் - அதிமுக தேர்தல் அறிக்கை
*பெண்களுக்கு பேருது பயண சலுகை வழங்கப்படும்
*ஓய்வூதிய உதவித் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
*அரசு கேபிள் இணைப்பு விலையில்லாமல் வழங்கப்படும்
*ஆண்டு முழுவதும் 2ஜி டேட்டா இலவசம்
*உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படும்
*பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்
*ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
*வீடுகளுக்கு இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும்
*மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்
*வீடு தேடி வந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்
*பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்