அ.தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் அ.தி.மு-க ஆட்சியை மீண்டும் அமைக்கும் முயற்சிக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது.
சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க தலைமையகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அ.தி.மு.க அவசர செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் முன்மொழிந்தனர். அ.தி.மு.க-வின் நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் பின்பற்றுபவர்கள் மற்றும் ஆதரவாளர்களை கட்சிக்கு மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று சேலத்தில் மூத்த 5 தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
ஆனால், அ.தி.மு.க-வின் இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு தீர்மானத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க மெகா கூட்டணி அமைத்து புதிய அரசியல் வியூகம் அமைப்பது குறித்து அ.தி.மு.க தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்த பிறகு, அக்கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இருப்பினும், செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு தீர்மானத்தில் அ.தி.மு.க-வுக்கும் அதன் கூட்டணி கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் மொத்தம், ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக உள்ள அனைத்து குழுக்களையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் இந்த நடந்துள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குழுக்களை இணைப்பது குறித்து எதுவும் பேசவில்லை.
அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கட்சியில் மீண்டும் இணைவதற்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று கட்சி வட்டாரங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“