Advertisment

கூட்டணி முறிவு: போஸ்டர் யுத்தம் போடும் அ.தி.மு.க - பா.ஜ.க

அ.தி.மு.க - பா.ஜ.க இடையேயான போஸ்டர் யுத்தம் போஸ்டர்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
AIADMK ends alliance with BJP viral posters

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

Edappadi-k-palaniswami | annamalai | aiadmk | tamilnadu-bjp: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் பனிப்போர் நிலவி வந்தது. முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் ஜெயலலிதாவை விமர்சித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அ.தி.மு.க - பா.ஜ.க  இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாக்கியது.

Advertisment

இந்த பரபரப்பான சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. விரிவான விவாதத்திற்குப் பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. பா.ஜ.க, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அ.தி.மு.க அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், அ.தி.மு.க - பா.ஜ.க  இடையே தற்போது போஸ்டர் யுத்தம் நடந்து வருகிறது. அ.தி.மு.க தலைமையை விமர்சிக்கக் கூடாது என பா.ஜ.க-வும், பா.ஜ.க-வை விமர்சிக்கக் கூடாது என அ.தி.மு-வும் ஏற்கனவே நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இரு கட்சியினரும் தங்களது கருத்துகளை போஸ்டர் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். 

அ.தி.மு.க தரப்பில் சிவகங்கையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் 'நவம்பர் மாதம் தான் தீபாவளி என நினைத்தோம்; ஆனால் பாஜகவை வெளியேற்றி செப்டம்பர் மாதமே தீபாவளியை கொண்டாட செய்த பொதுச்செயலாளர் என்றும், 'பாரத பிரதமர் எடப்படியார்' என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

இதேபோல் பா.ஜ.க சார்பில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில்,' போர்க்குணம் கொண்ட காவி படைகள் இருக்க; சனாதனத்தை தாங்கி பிடிக்க மக்கள் இருக்க; புலிபோல் தலைவர்கள் இருக்க; புலிகேசியின் ஆதரவு எதற்கு; போட்றா வெடிய' என்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அ.தி.மு.க - பா.ஜ.க  இடையேயான போஸ்டர் யுத்தம் போஸ்டர்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk Edappadi K Palaniswami Annamalai Tamilnadu Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment