Advertisment

சீட் கிடைக்காத அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் சுயேச்சையாக போட்டி

மதுரை மாநகராட்சியில், அதிமுகவில் சீட் கிடைக்காததால் அக்கட்சியின் முன்னாள் கவுன்சிலர்கள் சிலர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதால் மதுரை அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க, காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியில், அதிமுகவில் சீட் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த அக்கட்சியின் முன்னாள் கவுன்சிலர்கள், சுயேச்சையாக போட்டியிடுவதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக பாஜகவுடன் இடங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் அதிமுக தனித்து போட்டியிடுவதால் அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் அவர்களுடைய பெயர் இல்லாததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மதுரையில், 6 முறை மேற்கு மண்டலத் தலைவராகவும், கவுன்சிலராகவும் இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் பி.சாலைமுத்து, கட்சி சீட் வழங்காவிட்டால் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இது குறித்து பி. சாலைமுத்து ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், மாவட்டச் செயலாளர் என் வேட்புமனுவுக்கு எதிராக இருப்பதாகத் தெரிகிறது என்று செல்லூர் ராஜூவைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், கட்சி தலைமை அவருக்கு சீட் கொடுக்கும் என்று இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார். கட்சித் தலைமையின் முடிவுக்காக வெள்ளிக்கிழமை வரை காத்திருந்து பிறகு முடிவெடுப்பேன் என்று கூறினார்.

மதுரை மாநகராட்சி பணிக்குழு தலைவராக இருந்த மற்றொரு முக்கிய முன்னாள் கவுன்சிலர் கண்ணகி பாஸ்கர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்கிறார். “நான் இன்னும் எனது வார்டில் வேலை செய்கிறேன். எனது வெற்றிக்குப் பிறகு கட்சி எனக்கு அங்கீகாரம் தரும் என்று நம்புகிறேன்” என்று கண்ணகி பாஸ்கர் கூறினார்.

இவர்கள் மட்டுமல்லாமல், முன்னாள் மேற்கு மண்டல தலைவராக இருந்த முன்னாள் கவுன்சிலர் ராஜபாண்டி, முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்கள், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் தொடர்பில் இருப்பதும் தர்ம யுத்தத்தின் போது ஓ.பி.எஸ்-க்கு விசுவாசமாக மாறியதும்தான் செல்லூர் ராஜூ தங்களுக்கு எதிராக இருப்பதற்கு காரணம் என்கிறார்கள்.

மதுரை மாநகராட்சியில், அதிமுகவில் சீட் கிடைக்காததால் அக்கட்சியின் முன்னாள் கவுன்சிலர்கள் சிலர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதால் மதுரை அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை வரை மதுரை மாநகராட்சியில் 39 வேட்பு மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk Madurai Local Body Polls
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment