scorecardresearch

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Tamil Nadu: DVAC raids 21 properties of ex-AIADMK minister MR Vijayabaskar: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த சோதனைகள் நடைபெறுவதாக தகவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அறிக்கைகளின்படி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த சோதனைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் செல்வம், சென்னையில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர்கள் துறை அதிகாரிகளுடன் முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகக் கூறினார். “அதிகாரிகள் சோதனையிடுவதாக கூறினர், இந்த சோதனைகள் எவ்வாறு வரும் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். எங்களிடம் கணக்கு விவரங்கள் உள்ளன… அவர் [விஜயபாஸ்கர்] அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில் சொத்து விவரங்களை வழங்குமாறு அவர்கள் எங்களிடம் கேட்டார்கள். முன்னாள் அமைச்சர் தனது அறிக்கையை வழங்கியுள்ளார், எல்லாமே நடைமுறைக்கு ஏற்ப நடக்கிறது, ”என்று அவர் செல்வம் கூறினார்.

மே 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இது முதல் பெரிய நடவடிக்கை.

சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில், விஜயபாஸ்கர் கருர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக தலைவர்கள், அதிமுக தலைவர்கள் ஊழல் செய்ததாக பலமுறை குற்றம் சாட்டியிருந்தனர்.

2011-2015 க்கு இடையில் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளான செந்தில் பாலாஜி, விஜயபாஸ்கர் தலைமையில் இருந்தபோது போக்குவரத்து துறையில் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமாக கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், உறவினருக்குச் சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது,  சென்னையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Aiadmk ex minister mr vijayabaskar dvac raids