அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிசாமி கைது
அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி அதிமுகு கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தவறாக பயன்படுத்தியதற்காக காவல்துறை கைது செய்துள்ளது.
By: WebDesk
Updated: January 25, 2020, 09:54:24 AM
Tamil Nadu news today live Updates
Aiadmk ex mp kc palanisamy arrested at coiambatore : முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி இன்று காலை தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதிமுக செய்தி தொடர்பாளராகவும், திருச்செங்கோடு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் கே.சி.பழனிசாமி. கட்சியின் கொள்கைகளுக்கு முரண்பாடாக செயல்பட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதனையடுத்து, 2018ம் ஆண்டு, இவரை அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியது அதிமுக தலைமை.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானத்தை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. காவிாி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று கூறியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அப்போது கூறப்பட்டது.
இந்நிலையில், அதிமுக கழகத்தின் பெயரில் போலி இணையதளம் நடத்தியதாகவும், அதிமுக உறுப்பினர் என்று கூறி பலரையும் ஏமாற்றி வந்ததாகவும் இவர் மீது காவல் துறையினரிடம் அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகார் அளித்தார்.
இன்று அதிகாலை கே.சி பழனிசாமி இல்லத்தில் இதுகுறித்து விசாரணை நடத்திய போலிசார் அதிரடியாக கே.சி பழனிசாமியை கைது செய்தனர்.