Advertisment

முடிவுக்கு வந்த அ.தி.மு.க பிரச்னை; ஓ.பி.எஸ் முன் உள்ள வாய்ப்புகள்; பா.ஜ.க-வுக்கு மென்மையான அணுகுமுறை அவசியம்

பா.ஜ.க அதன் தமிழக அரசியல் உத்தியில், இ.பி.எஸ்-ஸின் எழுச்சியை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், ​​ஓ.பி.எஸ் சசிகலா-டி.டி.வி. தினகரன் உடன் கைகோர்ப்பதுதான் ஒரே வழி.

author-image
WebDesk
New Update
AIADMK, Edappadi K Palaniswami, Erode East bypoll, Tamil Nadu bypoll, M K Stalin, EVKS Elangovan, DMK, Congress, AIADMK, indian express, Tamil Nadu politics, political pulse, AIADMK power tussle

பா.ஜ.க தமிழ்நாட்டில் அதன் ராஜதந்திர உத்தியில் இ.பி.எஸ் ஏறுமுகத்தில் இருக்கும்போது, ஓ.பி.எஸ்-க்கு ஒரே வழிதான் இருக்கிறது அது சசிகலா-தினகரனின் அ.ம.மு.க உடன் கைகோர்ப்பதுதான்.

Advertisment

தமிழ்நாடு அரசியலில் அ.தி.மு.க-வின் தலைமைப் பதவிக்கான போட்டியில் எடப்பாடி கே பழனிசாமி அ.தி.மு.க-வின் மறுக்கமுடியாத தலைவராக உருவெடுத்துள்ளார். சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவு அவரை இடைக்கால பொது செயலாளராக உறுதி செய்தது. எனவே, அக்கட்சியின் ஒற்றைத் தலைமையாகி உள்ளார்.

இப்போது, அனைவரின் மனதிலும் உள்ள கேள்வி என்னவென்றால், இ.பி.எஸ் போட்டியாளரான ஓ.பி.எஸ்-ஸை மீட்டெடுக்க யார் வருவார்கள்? வி.கே. சசிகலா மற்றும் அவருடைய அக்கா மகன் டி.டி.வி. தினகரன் போன்ற கிளர்ச்சித் தலைவர்களுக்கு என்ன நடக்கும். இ.பி.எஸ் அவர்களை அ.தி.மு.க-வுக்குள் திரும்ப சேர்க்க முடியாது என்று என்று சபதம் செய்துள்ளார்?

நீண்ட காலமாக, பா.ஜ.க ஓ.பி.எஸ்-ன் பின்னால் சவாரி செய்துள்ளது. அ.தி.மு.க-வின் செல்வாக்கு செலுத்தும் மாநிலத்தில் அதன் நிலையை உறுதிப்படுத்த உதவியது. இருப்பினும், பா.ஜ.க ஏற்கனவே ஓ.பி.எஸ்-ன் அதிகாரப் போரில் தோல்வி அடைந்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், ஓ.பி.எஸ் தனது போட்டி அ.தி.மு.க வேட்பாளரை திரும்பப் பெற வைக்க சம்மதிக்க வைத்தது.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா நீதிமன்ற வழக்குகளில் பிரச்னை வந்தபோதெல்லாம், முதல்வராக முன்னேறிய தலைவர், ஒ.பி.எஸ் தெளிவாக வீழ்த்தப்பட்டதாக உணர்கிறார். மேலும் கட்சிக்காக தொடர்ந்து போராடுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், அவருக்கு முன் மிகவும் நடைமுறை, வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளே உள்ளன. அவருடன் அவர் வைத்திருக்கும் அ.தி.மு.க தொண்டர்களுடன் டி.டி.வி. தினகரனின் உடன் இணைவதுதான் அவர் முன் இருக்கும் வாய்ப்பு.

சசிகலா தனது உடல்நலம் காரணமாக பின்னணியில் இருந்து செயல்பட முடிவெடுத்திருப்பதால், நீதிமன்ற வழக்குகளின் அச்சுறுத்தலின் பின்னணியில் கவனமாக செயல்படுகிறார். ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி தினகரன் இருவரும் இணைவதில் இருந்தே பலன் பெற முடியும். டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் ஒப்பீட்டளவில் சிறிய அளவினரே. ஆனால், விசுவாசமான தொண்டர்களைக் கொண்டுள்ளார். மேலும், ஓ.பி.எஸ் இயல்பாகவே அவருடைய நம்பர் 2 தலைவராக இருப்பார்.

கடந்த காலங்களில் ஓ.பி.எஸ்-ஐ அடிக்கடி கேலி செய்ததையும், ஓ.பி.எஸ் தனது கடந்த கால நிகழ்வுகளையும் மறந்து டி.டி.வி தினகரனின் தலைமையை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் மட்டுமே அந்த இணைப்பு நடக்கும்.

1999-ம் ஆண்டில் அவர் வென்ற தேனியில் இருந்து 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடு செய்தால், ஓ.பி.எஸ்-ன் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு 2026-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், ஓ.பி.எஸ்-ன் பங்கு இப்போது அதிகமாக இருக்காது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் உயர்வுக்கு தோள்கொடுப்பதில் இப்போது ஓ.பி.எஸ்-ன் பங்கு அதிகமாக இருக்கும்.

அ.தி.மு.க-வின் கிளர்ச்சிப் பிரிவுகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், “ஓ.பி.எஸ்-க்கு ஏற்கனவே 72 வயதாகிவிட்டது. அவர் டி.டி.வி தினகரனுடன் இணைந்தால் வழிகாட்டியாக செயல்பட முடியும். டி.டி.வி தினகரன் அவருக்கு புகலிடம் கொடுக்கும்போது, ​​பயன்பெறுபவர் ஓ.பி.எஸ் மகனாக இருப்பார்.” என்று கூறுகின்றனர்.

இந்த இணைப்புகள் மற்றும் அணி மாற்றங்களுக்கு மேலேயும் அதற்கு அப்பாலும் பா.ஜ.க-வின் மிகைப்படுத்தப்பட்ட செல்வாக்கு உள்ளது. அ.தி.மு.க பிரிவுகளின் மொத்த தலைவர்களும் 2024-ம் ஆண்டில் பா.ஜ.க கூட்டணியின் ஒரு பகுதியாக ஒன்றாக இருக்க வேண்டும். மேலும், அது தெளிவான பார்வையாக இருக்கின்றன. மேலும், இது டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்-ஐ இணைப்பதைக் குறிக்கும். அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க ஒன்றுகொன்று விலகி இருக்கக்கூடும் என்றாலும், இரு கட்சிகளின் தலைவர்களும் பா.ஜ.க-வுக்காக பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இவை அனைத்திலும் பா.ஜ.க என்ன பலன் அடையும்? 2016-ல் ஜெயலலிதா இறந்ததிலிருந்து கட்சியில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள் இ.பி.எஸ்-ஐ லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா-தினகரன் அணியை கையாண்டதில், அவரைக் கையாள்வதில் ஏற்பட்ட தவறைத் தவிர்க்க வேண்டும் என்று பாடம் கற்றுக்கொண்டுள்ளது.

தினகரன் தனது ஜெயலலிதா தொடர்புகளை உயர்த்தியதாலும், ஓ.பி.எஸ் சரியான விசுவாசத்துடன் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்ததால் இ.பி.எஸ் சுயமாக தன்னை உருவாக்கிக்கொண்டார். ஜெயலலிதாவின் காலத்தில் கிட்டத்தட்ட அறியப்படாமல் இருந்தார். அவர் எதிர்பாராத வெற்றியாளராக இருந்தார். இ.பி.எஸ் முதல்வர் பதவியில் இருந்தபோது ஒரு திறமையான நிர்வாகி என தனது வழியில் கையாண்டார். ஓ.பி.எஸ்-ஸின் கையில் இருந்து கட்சியை வென்றபோது, ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க-விடம் அடிபணிவதைப் பார்க்க முடியவில்லை.

இ.பி.எஸ்-ஆல் அ.தி.மு.க-வின் ஏராளமான வளங்களை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள முடிந்தது. இது எந்தவொரு அரசியல் நெருக்கடியிலும் அவரை நல்ல நிலையில் இருக்க வைத்தது.

இ.பி.எஸ் இப்போது அ.தி.மு.க-வின் மறுக்கமுடியாத தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க தமிழ்நாட்டிற்கான அதன் உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பின், பா.ஜ.க-வின் செல்வாக்கு காரணமாக மாநிலத்தில் பல வாக்காளர்கள் அ.தி.மு.க-வில் இருந்து விலகிச் செல்வதால், இ.பி.எஸ் உடனான அதன் நடவடிக்கைகளை மாற்றியமைப்பது அதன் முன்பு உள்ள முதல் பணிகளில் ஒன்று.

மொத்தத்தில், புதிய தலைவர்கள் மற்றும் புதிய சமன்பாடுகள் உருவாகிய சமீபத்திய ஆண்டுகளில், தமிழ்நாடு ஒரு பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. ஒரு பக்கம் அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி என்றால், மறுபுறம் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தனது தந்தையின் செல்வாக்கில் இருந்து வளர்ந்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ops Eps Bjp Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment