சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் அமைப்பதற்கு பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதர எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதி காலமானார். அவருக்கு சென்னை மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
2.23 ஏக்கரில் மெரினா அண்ணா நினைவிடத்தின் வளாகத்தில், மு.கருணாநிதி நினைவிடம் கட்டப்படும். அதனுடன் இணைந்ததாக சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்காக ரூ.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கருணாநிதி பேனா நினைவு சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று தனது எதிர்ப்பை கடுமையாக கூறினார்.
அதன் பிறகு, சமீபத்தில் மத்திய அரசு 15 நிபந்தனைகள் விதித்து சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் கருணாநிதி பேனா நினைவு சின்னத்தை சென்னை மெரினா கடலில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, மீனவர்கள் சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil