கோவையில் மழை நீர் தேங்க இதுதான் காரணம்: எஸ்.பி வேலுமணி பேட்டி
கோவை குனியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் அவர்கள் சந்திக்கும் சிரமங்களை கேட்டறிந்தார்.
கோவை குனியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் அவர்கள் சந்திக்கும் சிரமங்களை கேட்டறிந்தார்.
Advertisment
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி, “குனியமுத்தூர் 87, 88 ஆகிய வார்டுகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கோவையில் 20 நாட்களாக தொடர் மழை பெய்தது. எப்போது மழை பெய்தாலும் இப்பகுதியில் மழைநீர் தேங்கும் என கூறிய அவர் இப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க பாதாள சாக்கடை கொண்டுவர திட்டம் இருந்ததாகவும் ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட பாதாள சாக்கடை டெண்டர் ரத்து செய்யப்பட்டதே தற்போது மழை நீர் தேங்கி நிற்க காரணம். அ.தி.மு.க ஆட்சியில் மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எஸ்.பி. வேலுமணி, மழை பாதிப்புகளை பார்வையிடுவது குறித்து மாநகராட்சி கமிஷனர், கலெக்டரிடம் தகவல் தெரிவித்தேன். ஆனால், ஒரு அதிகாரியும் வரவில்லை என தெரிவித்தார். இதனால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சிரமப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகளை இனியாவது சரி செய்யுங்கள். அதிகாரிகள் மக்களை பார்த்து வேலை செய்யுங்கள் என எஸ்.பி வேலுமணி கேட்டுக்கொண்டார்.
கோவையை பொறுத்தவரை எந்த சாலையிலும் நடக்க முடியவில்லை எனவும் எல்லா சாலைகளும் மோசமாக உள்ளது எனவும் தெரிவித்த அவர் அ.தி.மு.க ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகளை ரத்து செய்துள்ளார்கள். இதற்கு அரசு நிதி இல்லை என சொல்லக்கூடாது எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
சென்னையில் இதுவரை நாங்கள் செய்த வேலையை தவிர வேறு எதுவும் செய்யப்படவில்லை எனவும் கோவை மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு வாரம் கெடு என கூறிய அவர் பணிகளை செய்யவில்லை எனில் மிகப்பெரிய உண்ணாவிர போராட்டம் நடத்தப்படும்.
நாங்கள் செய்த பணிகள் மக்களுக்கு தெரியும் என கூறினார். தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
முதலமைச்சர் சொன்னது போல மக்கள் பாராட்டவில்லை. வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, கூட்டணி கட்சிகளே வேறு வழியில்லாமல் இருக்கிறார்கள் எனவும் சென்னையில் மழைநீர் தேங்காததற்கு நாங்கள் செய்த பபணிகளே காரணம் என தெரிவித்த அவர் மழைநீர் வடிகால் நாங்கள் கட்டியது எனவும் கூறினார்.
தற்போது லேசான மழைக்கே சென்னை தாங்கவில்லை என கூறிய அவர் டிவி யில் விளம்பரம் செய்து நடிக்காமல் வேலை செய்யுங்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி கூறினார்
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"