அதிமுக 50வது ஆண்டில் அடிஎடுத்து வைப்பதால் பொன்விழா கொண்டாட்டங்கள் குறித்து விவாதிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா, “அதிமுக தலைவர்கள் திமுக மீது மென்மையான போக்கை கடைபிடிப்பதாகக் கூறி கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், அவரது பேச்சு இடைமறிக்கப்பட்டு அவர் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் கலந்துகொள்ள வேண்டும் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வி.கே. சசிகலா அக்டோபர் 16ம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டம் இல்லத்திற்கும் செல்ல உள்ளதாக அறிவித்தது குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ஒன்பது மாவட்டங்களில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தல் குறித்து எந்த ஆலோசனையும் இல்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் பாமக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 66 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவி ஆட்சியை இழந்தாலும் தமிழ சட்டப் பேரவையில் முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
இந்த நிலையில்தான், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பேசிய அன்வர் ராஜா, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், சமீபத்தில் எம்ஜிஆர் ஒரு துரோகி என்று கூறியதை சுட்டிக்காட்டி, திமுகவை கடுமையாக விமர்சிப்பதை விட துரை முருகனுக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிடுவதை கட்டுப்படுத்திய அதிமுக தலைமையை கடுமையாக சாடினார். துரைமுருகன் தனது வார்த்தையைத் திரும்பப் பெறக் கோரி அவருக்கு எதிராக போராட்டங்களை ஏற்பாடு செய்ய அதிமுக தலைமை தவறிவிட்டது என்று அன்வர் ராஜா கடுமையாக விமர்சித்தார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அதிமுக தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் திமுக அரசை புகழ்வதாக அன்வர் ராஜா குற்றம் சாட்டினார். கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட புதிய செயலக வளாகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கல்வெட்டு பதிக்கப்பட்டது குறித்தும் அவர் விமர்சனம் செய்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயலலிதா செய்தது போல முதலமைச்சர் ஸ்டாலின் சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் ஒழிக்கிறார் என்று கூறினார். சட்டமன்றத்தில் துரை முருகனை ஓபிஎஸ் பாராட்டினார். “அதிமுகவின் கொள்கை திமுகவை எதிர்ப்பது. ஆனால், இந்த திடீர் சமரசம் ஏன் என்பதை அறிய அன்வர் ராஜா முயன்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், பொன்விழாவைக் கொண்டாடவும், எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்ஜிஆருடன் பணியாற்றிய நடிகர்களை கௌரவிக்கவும் பஞ்சாயத்து, மாவட்ட மற்றும் மாநில அளவில் பெரிய கூட்டங்களை நடத்த முடிவு செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.