Advertisment

ஸ்டாலினை விமர்சித்த அ.தி.மு.க நிர்வாகி கைது: போலீசாரிடம் விளக்கம் கேட்ட பொள்ளாச்சி ஜெயராமன் - வீடியோ

முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த வழக்கில் பொள்ளாச்சி அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி அருண்குமார் கிழக்கு காவல் நிலை போலீசார் கைது செய்து செய்யப்பட்டார்.

author-image
WebDesk
Oct 07, 2023 10:26 IST
New Update
AIADMK functionary arrested for criticizing CM Stalin Pollachi Jayaraman police video

வீடியோவை பொள்ளாச்சி அ.இ.அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் என்று கூறப்பட்டது.

Aiadmk | coimbatore | pollachi-jayaraman: சென்னையில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபோதையில் ஒருவர் மதுபாட்டில் விலை ஏற்றம் என தலையில் மது வைத்து தி.மு.க அரசு மீதும் முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, 

Advertisment

இந்நிலையில், இந்த வீடியோவை பொள்ளாச்சி அ.இ.அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் என்று கூறப்பட்டது. இதனையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் அருண்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் (non-Bailable sectional) ரீமாண்ட் செய்தனர்.

இந்த தகவல் அறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மற்றும் கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் அ.தி.மு.க.வினர்  கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளரிடம் கைது குறித்து விளக்கம்  கேட்டனர். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Aiadmk #Coimbatore #Pollachi Jayaraman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment