அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்பது குறித்து பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் கடந்த சில வாரங்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியினரிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைமை பதவியை பிடிக்க இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடுமையாக போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் தலைமை பதவிக்காக பல வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஒபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பு குறித்து கவலைப்படாமல் இபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவுக்கு தேவையான ஏற்பாடுகளை தொடங்கிய நிலையில், இன்று (ஜூலை 11) காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும் பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது குறித்து கட்சி தொண்டர்கள் மட்டுமலலாது தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு நடைபெறும் இடத்தை நோக்கி பயணித்து வரும் நிலையில், ஒபிஎஸ் தரப்பினர் கட்சியின் தலைமை அலுவலகம் நோக்கி படையெடுத்தனர். ஆனால் அங்கு இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒபிஎஸ் தலைமை அலுவலகத்திற்கு செல்ல விடாமல் இபிஎஸ் ஆதரவாளர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் தற்போது அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை என்று கூறிய நீதிமன்றம், ஒபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக பொதுக்குழு கூட்டம் சிக்கலின்றி நடப்பது உறுதியாகியுள்ள நிலையில், இபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், ஒ.பி.எஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கட்சி உறுப்பினரின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். நீதிமன்றத்தின் மூலம் சாதித்துவிடலாம என்று நினைக்கிறார்கள்.
ஜனநாயகத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கையெப்பம் தான் ஒருங்கிணைப்பாளர் கட்சியில் நலனுக்கு ஏற்றவாறு உறுப்பினர்களை சமானதானம் செய்யவேண்டும். பொதுக்குழுவில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகலாம். கட்சி விதிகளை நிர்ணையிக்கும் விவகாரங்ளில் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிபதி கிருஷ்ண ராமசாமி ஒ.பி.எஸ்க்கு தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil