/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-23T113759.276.jpg)
AIADMK General Committee meeting; Vaithilingam Tamil News
AIADMK General Committee meeting Tamil News: அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று காலை பரபரப்பாக தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்களில் மூலம் வானகரத்தில் குவிந்தனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 2,500 பேர் பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்திற்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்றவை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சிலர் போலி பாஸ்களுடன் வந்திருப்பதாக தகவல் வெளியானது.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-23T114332.874.jpg)
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் சென்னை வானகரம் பகுதி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இருந்த போதிலும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டம் நடக்கும் இடத்திற்கு முதலில் வந்தார். அவரை வரவேற்ற தொண்டர்கள், அவருக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.
துரோகி என முழக்கம்
இதற்கிடையில், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மேடையில் இருந்து பேசிய போது துரோகி என முழக்கம் எழுந்தது. இதனால் அவர், பொதுக்குழு மேடையில் இருந்து இறங்கினார்.
உறுப்பினர்கள் வாக்குவாதம்
அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க அதிமுக மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-23T114502.875.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-23T114610.085.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-23T114754.292.jpg)
Cadres offer grand welcome to Leader of Opposition Edappadi K Palaniswami at Vanagaram. #AIADMK#EPSpic.twitter.com/SoW7QsbWod
— Janardhan Koushik (@koushiktweets) June 23, 2022
அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் மண்டபம் முன்பு கூடிய தொண்டர்கள் கூட்டம். #ADMKGC#OPSvsEPSpic.twitter.com/c8aoU1YnpO
— selvaraj s (@selvareporter71) June 23, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.