Advertisment

விரைவில் அ.தி.மு.க பொதுக் குழு: ஓ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு

'விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்.' என்று ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
G20 Conference Consultative Meeting in delhi

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

 O. Panneerselvam Tamil News: அதிமுக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் கட்சியின் நிர்வாகிகளாக புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், தொண்டர்களும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். அப்போது வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisment
publive-image

ஓ.பன்னீர்செல்வம்

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக சார்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். பிரதமர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை.

விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன். மெகா கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை சந்திப்பேன்” என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம், இவ்வாறு அறிவித்திருப்பது அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Ops Admk Aiadmk Panneer Selvam O Panneerselvam Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment