scorecardresearch

அ.தி.மு.க பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும்: ஓ.பி.எஸ் தரப்பின் 5 மனுக்களும் தள்ளுபடி

ஐந்து உரிமைகள் வழக்குகளும் உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்நிலையில் பல்வேறு தினங்களில் விசாரணைக்கு வந்தது.

ADMK Case
ADMK general secretary case verdict

ஓ.பி.எஸ் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியது செல்லுபடியாகி உள்ளது.  

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தொடுக்கப்பட்ட 5 மனுக்கள் என்ன?

*11.7.2022 பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்- மனோஜ் பாண்டியம்

*அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும்- வைத்திலிங்கம்

* சட்டதிட்ட விதிகளை மாற்றி அமைத்தது செல்லாது- ஜே.சி.டி. பிரபாகரன்,

*கழக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தக் கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும்- மனோஜ் பாண்டியன்

*நீதி மன்றம் அனுமதித்தால் நானும் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறேன் அதனால் இந்த பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது- ஓ.பன்னீர் செல்வம்,

இப்படி பல்வேறு நாட்களில் மேற் சொன்ன காரணங்களுக்காக ஐந்து உரிமையியல் வழக்குகள் சென்னை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த ஐந்து உரிமைகள் வழக்குகளும் உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்நிலையில் பல்வேறு தினங்களில் விசாரணைக்கு வந்தது.

மேலும் 19.3.2023 அன்று விசாரணை நடந்து முடிந்த பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தலாம் ஆனால் முடிவுகளை அறிவிக்க கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்திருந்தது.

குறிப்பாக இது போன்ற வழக்குகளால் கழகம் செயல்பட முடியாத சூழ்நிலையில் இருக்கிறது என்றும், பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுக்க இயலவில்லை என்பதையும் எடுத்துக் கூறியதன் அடிப்படையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த ஐந்து வழக்குகளையும் இன்றைக்கு தீர்ப்புக்காக பட்டியலிட்டு இருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், ஏற்கனவே உச்சநீதிமன்றம் 11.7.2022 அன்று நடந்த பொதுக்குழு செல்லும் என்று அறிவித்ததன் அடிப்படையில் கழக சட்ட திட்ட விதிகளை திருத்தவே இயலாது என்ற காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது, பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய இயலாது, கழக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டு ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பார். மேலும் அதிமுகவின் ஒற்றை தலைமையாக இ.பி.எஸ் இருப்பார் என்பது இந்த தீர்ப்பு மூலம் உறுதியாகி உள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடையில்லை என தீர்ப்பு வந்த நிலையில் சென்னை, அதிமுக அலுவலகத்தில்.  இ. பி. எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Aiadmk general secretary case o panneerselvam edappadi palanisami