தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் குறித்து பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டியளித்தார்.
அப்போது, இந்த இரு மசோதாக்கள் குறித்து நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். ஒரே நாடு ஒரே தேர்தலில் அதிமுகவின் மாறுபாடாக நிலைப்பாடு குறித்தும் பேசினார்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.14,2024) 2 தீர்மானங்கள் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், “இந்த இரண்டு தீர்மானங்களுக்கு நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுகின்றன” என்றார்.
தொடர்ந்து, இந்தத் தீர்மானங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, தொகுதி மறுவரை செய்வதற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளித்தது. அதேசமயம், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்தது. எனினும் சில கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில் இது குறித்து பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், “மற்ற மாநிலங்கள் ஒரு திசையில் பயணித்தால், அதில் இருந்து விலகி மற்றொரு திசையில் தமிழ்நாடு பயணிப்பது ஒன்றும் புதிதல்ல.
மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டும்தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்ற அளவுக்கோல் இதுவரை சொல்லப்படவில்லை.
இதனால் குடும்ப கட்டுப்பாட்டை பின்பற்றிய மாநிலங்கள் பாதிக்கப்படும்” என்றார். தொடர்ந்து, இதனை எச்சரி்கை உணர்வாக எடுத்துக் கொள்ளலாமா என நெறியாளர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ராம சீனிவாசன், “அப்படியென்றால் அதன் பொருளடக்கத்தில் இந்த மசோதா இருந்திக்க வேண்டும்; ஆனால் அவ்வாறு இல்லை” என்றார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அதிமுக மாறுபாடான நிலைப்பாட்டை எடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, “இதற்கு பதில் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்; மக்கள் அவர்களிடம் இதுகுறித்து கேள்வியெழுப்புவார்கள்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“