2019ம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் என்.டி.ஏ இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததும் மத்திய அமைச்சரவையில் சேர்வதற்கான பாஜகவின் வாய்ப்பை நிராகரித்த ஐக்கிய ஜனதா தளம் இப்போது மத்திய அரசில் சேர ஆர்வமாக உள்ளது. அதே போல, பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்க சான்ஸ் இருக்கிறதா என்ற எதிர்பார்ப்புகள் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எழுந்துள்ளன.
இந்த விவகாரம், பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதீஷ் குமார் செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு சென்றதையடுத்து மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான ஊகங்கள் வந்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் ஆர்.சி.பி. சிங், தங்கள் கட்சியும் பாஜகவும் பீகாரில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் விரைவில் அல்லது பின்னர் ஐக்கிய ஜனதா தளமும் மத்திய அமைச்சரவையில் இணைந்தால் ஆச்சரியமில்லை என்றும் திங்கள்கிழமை கூறினார். இருப்பினும், நிதீஷின் டெல்லி வருகை தனிப்பட்ட காரணங்களுக்காக என்றும், எந்த அரசியல் காரணமும் அதனுடன் இணைக்கப்படக்கூடாது என்றும் ஆர்.சி.பி. சிங் வலியுறுத்தினார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 16 லோக் சபா எம்.பி.க்களும் மற்றும் 5 ராஜ்ய சபா எம்.பி.க்களும் உள்ளனர். மேலும், மத்திய அரசில் சேருவது குறித்து பா.ஜ.க.விடம் இருந்து கட்சிக்கு சமிக்ஞைகள் கிடைத்ததாக அறியப்படுகிறது.
என்.டி.ஏ தலைவர் ஒருவர் கூறுகையில், “பாஜக (அடுத்த ஆண்டு) உ.பி சட்டமன்றத் தேர்தல்களை மனதில் வைத்து செயல்படலாம். பூர்வாஞ்சல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஓபிசி சாதியான படேல்/குர்மி வாக்குகளைப் பெறுவதில் நிதீஷ் குமார் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.” என்று கூறினார்.
இதனிடையே, லோக் ஜனசக்தி கட்சியின் (எல்.ஜே.பி) பசுபதி பராஸ் பிரிவைச் சேர்ண்த ஒரு வட்டாரம், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் பராஸையும் சேர்க்கலாம். மத்திய அமைச்சராக்கப்பட்டால் எல்.ஜே.பி பிரிவின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பராஸ் ஏற்கனவே கூறியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் ஆர்.சி.பி.சிங், பதினைந்து நாட்களுக்கு முன்னர் என்.டி.ஏ தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய பங்கை வழங்குவதைப் பற்றி பேசியது என்று ஊடகங்களிடம் திங்கள் கிழமை கூறினார்: “நாங்கள் 1996 முதல் பாஜகவுடன் இருக்கிறோம். எங்கள் தலைவர்களுக்கு எந்தவிதமான பதற்றமும் இல்லை. நாங்கள் மத்திய அமைச்சரவையில் சேரும்போது, எப்போதும் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். பீகாரை ஆளுவதில் நாங்கள் ஏற்கனவே ஒன்றாக இருக்கிறோம்.” என்று கூறினார்.
மத்தியில் இரட்டை இயந்திரம் அரசாங்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டதற்கு, சிங், “இது ஒரு ஒற்றை இயந்திர அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது இரட்டை இயந்திர அரசாங்கமாக இருந்தாலும் சரி, பீகார் எவ்வாறு முன்னேற முடியும் என்பதை சிந்திப்பதாகும்
என்று கூறினார். அவருடைய பெயர் அமைச்சரவை வேட்பாளராக சாந்தியம் உள்ளதாக பேசப்படுவது குறித்து கேட்டதற்கு, அவர் “எனது பெயர் 2017 முதல் சுற்றுகளைச் செய்து வருகிறது. மக்கள் ஊகிக்கட்டும் … எங்கள் தலைவர் இதுபோன்ற விஷயங்களில் சரியான விவாதங்களுக்குப் பிறகு அழைப்பு விடுக்கிறார்.” என்று கூறினார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முங்கர் தொகுதி எம்.பி.யுமான ராஜீவ் ரஞ்சன் சிங், அல்லது லாலன் சிங், மத்திய அமைச்சர் பதவிக்கு மற்றொரு போட்டியாளராகக் காணப்படுகிறார். “தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவது பிரதமரின் விருப்பம்; எந்தவொரு கூட்டணி கட்சியுடனும் (சாத்தியமான விரிவாக்கத்தில்) ஆலோசனை நடத்துவதும் அவரது விருப்பம். இப்போதைக்கு, இது எல்லாமே ஊகங்கள்தான்.” என்று அவர் கூறினார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியைப் போலவே, என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இருந்து வருகிறது. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக தேனியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 38 இடங்களில் பாஜக – அதிமுக கூட்டணி படுதோல்வியடைந்தது. தேனியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். 2019ல் 2வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்தபோது ரவீந்திரநாத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்தபோதே மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்காத பாஜக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்த நிலையில், பாஜக இப்போது வாய்ப்பு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளன.
பாஜக மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் அளிக்க முன்வந்தாலும் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி அளிக்க அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகம்தான். அதனால், வட்டாரங்கள், வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”