Advertisment

எடப்பாடி கையில் அதிமுக: சாதகமாகும் நீதிமன்ற உத்தரவுகள்

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கின் விசாரணையும் அதிவேகமாக நடைபெறவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் இந்த வழக்கில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

author-image
WebDesk
New Update
AIADMK in grip, EPS hand strengthened as court orders

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசிர்வதிக்கப்பட்டவர் என அவருக்கு நெருங்கிய அதிமுக பிரமுகர் கூறுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) ஆதரவாக கடந்த கால வாரங்கள் அமைந்தன. ஜூலை மாதம் பொதுக்குழு கூட்டி முன்னாள் முதலமைச்சரும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக முடிசூடிக்கொண்டார்.

Advertisment

இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இரு நீதிமன்ற தீர்ப்புகள் அமைந்தன. இது குறித்து அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி புத்திசாலி. அவர் முன்னால் நி;ன்ற தடைகள் அகன்று விலகியுள்ளன. பாஜக கூட்டணியில் சுதந்திரம் இருக்காது என்பது அவருக்கு தெரியும். ஏற்கனவே பாரதிய ஜனதா கூட்டணியில் இரு தேர்தல்களில் தோற்றுவிட்டோம்” என்றார்.

இதேபோன்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அதிமுக முன்னாள் தலைவர் ஒருவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி ஆசிர்வதிக்கப்பட்டவர். மற்ற மாவட்டத் தலைவர்களும் அவரை மனமாற ஏற்றுக்கொள்கின்றனர். இது நடக்கவில்லையென்றால் பாஜக எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிடும். ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆதரவு கிடையாது.

ஆகையால் அவரை கட்சியில் இருந்து நீக்குவது எளிது. ஆனால் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க கடினமாக இருந்தது.

மேலும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். ஆகையால் சசிகலாவை அவர் மீண்டும் கட்சியில் இணைக்க மறுத்துவிட்டார்.

இரண்டு வழக்குகள்

எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை ஆகஸ்ட் 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துவிட்டது.

இது நடந்து 8 நாள்களுக்குள் சேகர் ரெட்டி மீதான வருமான வரி வழக்கு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த இரு வழக்குகளையும் காட்டி பாஜக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் இறப்புக்கு 3 நாள்கள் கழித்து சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது.

சேகர் ரெட்டி 2014-15 முதல் 2017-18ஆம் நிதியாண்டுகளில் ரூ.384.55 கோடி வருமான வரி கட்ட விண்ணப்பித்திருந்தார். ஆனால் இதனை நிராகரித்த வருமான வரித்துறை உண்மையில் சேகர் ரெட்டி ரூ.2 ஆயிரம் கோடி வரை வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்ஞ்சாட்டியது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ரெட்டி தரப்பு இதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் மீது திமுக மூத்தத் தலைவர் ஆர்.எஸ். பாரதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எடப்பாடி மற்றும் அவரது உறவினர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி அவரது பதவியை தவறாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்’ எனத் தெரிவித்திருந்தார்.

இது தவிர கோடநாடு கொலை-கொள்ளை வழக்கின் விசாரணையும் அதிவேகமாக நடைபெறவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் இந்த வழக்கில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

திமுக அரசு சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைத்தது. அப்போது தங்களது தலைவர்களை சிக்க வைக்கும் முயற்சி என அதிமுக தலைவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். மேலும் விசாரணையிலும் பெரிதளவு முன்னேற்றம் இல்லை.

publive-image

மற்றொருபுரம் 2024 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியமைக்க வேண்டும், அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.கே. சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் ஒரே எம்.பி., ஓ.பி. ரவீந்திர நாத் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதிமுகவில் வி.கே. சசிகலா குடும்பத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுவந்தாலும் அடுத்துவரும் பொதுத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா அதிமுக கூட்டணி தொடரும் என்றே கூறப்படுகிறது.

ஏனெனில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், கட்சி உள்கட்சி பூசல் விரிவானதை தொடர்ந்து பாஜக இரட்டை தலைமை மாதிரியை நிலைநாட்டியது. ஆனால் சமீபகாலமாக அதிமுகவின் உள்கட்சி பிரச்னைகளில் பாஜக ஒதுங்கி நிற்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்தத் தலைவர் கரு. நாகராஜன், ‘அதிமுக தங்களது உள்கட்சி பூசலை சட்ட ரீதியாக தீர்க்க வேண்டும். வருகின்ற மக்களவை தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள ஒரு வலிமையான கூட்டணி தேவை’ என்றார்.

இது ஒருபுறம் இருக்க எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ளும் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் அவரது நிலையை உயர்த்தியுள்ளன. டிடிவி தினகரன் மீதான தேர்தல் ஆணைய வழக்கு நிலுவையில் உள்ளது. இது டிடிவியின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

மேலும் சசிகலாவும் வழக்குகளை எதிர்கொண்டுவருகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் சசிகலா வாங்கிய சொத்துகளில் ரூ.1600 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sasikala Vs Aiadmk Ops Eps Sasikala Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment