ஈரோடு கிழக்க்கு தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில், திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை.
இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பேன் என சொல்பவர்கள் தென்னரசு பெயரை சொல்ல மறுப்பது ஏன்? அதுவே முரண்பாடு தான்.
திமுக சார்பு நிலைப்பாட்டை எடுத்துள்ள பன்னீர்செல்வத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.
அதிமுக தொண்டர்கள் பன்னீர்செல்வத்தின் செயல்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஓபிஎஸ்சால் இரட்டை இலையை முடக்க முடியவில்லை.
ஓபிஎஸ் குறித்த செங்கோட்டையன் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்”, என்று ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.