'நோட்டாவ தாண்ட மாட்டார்; பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை': ஜெயக்குமார் அதிரடி பேட்டி

அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இல்லை என்றும், அண்ணாமலை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் வாக்கு கிடைக்கும் என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இல்லை என்றும், அண்ணாமலை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் வாக்கு கிடைக்கும் என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

author-image
WebDesk
New Update
AIADMK Jayakumar on alliance with BJP and Annamalai

'அண்ணாமலையை அ.தி.மு.க தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்பார்கள்' என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Aiadmk | d-jayakumar | tamilnadu-bjp | annamalai: அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போது அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இல்லை என்றும், அண்ணாமலை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் வாக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். 

Advertisment

இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது பின்வருமாறு:- 

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து பா.ஜ.க மேலிடத்தில் புகாரளித்துள்ளோம். பல முறை எச்சரித்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்துகிறார். பா.ஜ.க-வுடன் தற்போது அ.தி.மு.க கூட்டணியில் இல்லை. இது தான் அதிமுக கட்சி நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. அ.தி.மு.க-வுக்குள் ஒரு குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் கடுமையான அளவுக்கு விமர்சனங்களை சந்திக்க நேரிடும். அண்ணாமலையை அ.தி.மு.க தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்பார்கள். அண்ணாமலை கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க உடனான கூட்டணி குறித்து தேர்தலின் போது முடிவு செய்வோம். அண்ணாமலையை தேசிய தலைமை தான் இயக்குகிறது. எங்களை விமர்சிக்கும் பா.ஜ.கவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்கு வாங்குவார்" என்று விமர்சித்தார்.

Advertisment
Advertisements

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk Annamalai D Jayakumar Tamilnadu Bjp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: